இரவு நேரத்தில் மட்டும் இருமல் வருகிறதா? அப்போ இந்த இலையை கசக்கி சாறு எடுத்து பருகுங்கள்!!
பனி காலத்தில் வறட்டு இருமல் தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை மூன்று தினங்களுக்கு செய்து வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆடாதோடை இலை – ஒன்று
2)ஓமவல்லி இலை – இரண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)துளசி – பத்து
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஆடாதோடை இலை,துளசி மற்றும் ஓமவல்லி இலையை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு மூன்று இலைகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மிகசர் ஜார் அல்லது உரலில் இந்த இலைகளை போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)அரிசி – இரண்டு தேக்கரண்டி
2)கருப்பு எள் – ஒரு தேக்கரண்டி
3)பால் – அரை கப்
3)உப்பு – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசி மற்றும் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து அரை கப் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.அதன் பிறகு ஊறவைத்துள்ள அரிசி மற்றும் கருப்பு எள்ளை அதில் போட்டு நன்றாக வேகவிடவும்.அரிசி கலவை நன்கு வெந்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து சூடாக சாப்பிட்டால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.தினமும் இரண்டுமுறை நீராவிபிடித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.பட்டை தேநீர் பருகி வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை முழுமையாக நீங்கும்.