காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

Photo of author

By Rupa

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

Rupa

Counseling meeting for cable TV operators in the presence of police inspector!
காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!
தேனி மாவட்டம் கடமலை மயிலை  ஒன்றிய அளவில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, தெய்வேந்திரபுரம், பொன்னன் படுகை, முருக்கோடை, வாலிப்பாறை  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவ்வப்போது கேபிள் டிவி ஆபரேட்டர் இடையே மோதல் சச்சரவுகள்  ஏற்பட்டு வந்தது.
இந்த மோதலை தடுக்கும் விதத்தில் நேற்று மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் இதில் கலந்துகொண்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இனிவரும் காலங்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராது என ஒட்டு மொத்தமாக சம்மதம் தெரிவித்தன மேலும் அவ்வாறு பிரச்சனைகள் வந்தால் சரியான நடவடிக்கைகள் காவல்துறை எடுத்து தண்டிக்கப்படுவீர்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.