கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

0
273
Country trees instead of oak trees! The order issued by the High Court!
Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.

அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் வனப்பகுதியில் 1325 ஹெக்டேர் பரப்பில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.மேலும் இதனை அகற்ற நபார்டு திட்டத்தின் கீழ் அவை அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதுவரையிலும் 281 ஹெக்டேர் அளவில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள மரங்கள் ஓராண்டு காலத்தில் அகற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.ரூ 45லட்சம் செலவில் சீமைக் கருவேல மரம் அகற்றப்பட்டுள்ளது.மேலும் மாவட்டதோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை விசாரித்த நீதிபதிகள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.மேலும் 15நாட்களில் சீமை கருவேல மரங்களை அகற்றவும் ,அதனை ஏலத்தில் விடுவதற்காகவும் குழு அமைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அதனையடுத்து சுற்றுச்சூழலை சமநிலையில் பாதுகாக்கும் வகையில் அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும் என நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும். நீர்நிலைகளில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களில் 2750 ஹெக்டேர் பரப்பில் மட்டும் அகற்றப்பட்டு உள்ளது.மீதமுள்ள மரங்களை அகற்ற ஏலம் விட உத்தரவிட்டனர்.மேலும் இந்த விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Previous articleபள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ!
Next articleகச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!