தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கேள்வி! தமிழக அரசின் பதில் என்ன?

Photo of author

By Parthipan K

கொரோனா தொற்று காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆல் பாஸ், தேர்வுகள் எழுத வேண்டிய அவசியமில்லை, தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி இருந்தால் போதும் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு. இந்த அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற விவகாரத்தில் தமிழக அரசும், யுஜிசியும், நவம்பர் 20ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்றம் மாணவர்களை, தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெறலாம் என்று  எதிர்பார்க்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பமும், பயமும் உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய உத்தரவிற்கு தகுந்த பதிலை அளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.