சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
70

சசிகலா என்பவர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். ஆனால் சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா உள்பட சிலர் மீது வருமானத்திற்கு மேல் சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு உச்ச நீதிமன்றம் இவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனை அளித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தண்டனையில் இருக்கும் சசிகலா அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் சசிகலா வெளியில் வந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும் பல கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது ஏனெனில் பினாமி தடுப்பு சட்டத்தின்படி சசிகலாவின் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளது. அவற்றில் கொடநாடு பங்களா மற்றும் சிறுதாவூர் பங்களா ஆகியவை இடம்பெற்றுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோரின்  பெயர்களில் உள்ள சொத்துக்களையும் வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு வருமான வரி துறையினரால் சுமார் 1,500 கோடி மதிப்பிலான சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K