மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

0
187

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடிக்கும் மேல் உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. கடந்த வாரம் ஏறுமுகமாக சென்ற கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,935 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்திருப்பது மக்கள் மத்தியில் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?
Next articleநாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here