முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கோலி அபாரம்?

Photo of author

By CineDesk

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று(6.12.2019) நடந்தது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெட்மையர் 56 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 37 ரன்களும் எடுத்தனர் இந்தியா தரப்பில் சகல் 2 விக்கட்டுக்களையும் வாஷிங்டன் சுந்தர், சகார், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. காயம் காரணமாக தவான் இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.

அணியின் ஸ்கோர் 30 ஆக இருந்த பொழுது இந்தியா ரோகித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கடுத்ததாக வந்த விராட் கோலி கேஎல் ராகுல் இணை நல்ல பதிலடி கொடுத்தது அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்த பொழுது கேஎல் ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் 62 ரன்கள் எடுத்திருந்த கே எல் ராகுல் அதில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசி இருந்தார் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் இதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும்.

இறுதியாக 18.4 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்யம் என்று முன்னிலையில் உள்ளது.