2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்!!! நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது!!!
ஒலிம்பிக் பேட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்கும் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி இருக்கின்றது. அதன்படி 2028ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருக்கின்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருந்தது. 1900ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பிரான்ஸ் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.
1900ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற எந்தவொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இதையடுத்து 100 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 100 ஆண்டுகள் போராட்டத்திற்கு தற்பொழுது ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது.
அதாவது 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த பட்டியலில் பிளாக் கால்பந்து, பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.