5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!!

0
27
#image_title
5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!!
நடந்து முடிந்த 5வது உலக வளையப் பந்து போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் ஊர் பிரமுகர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பும் தென்னாப்பிரிக்கா வளையபந்து வாரியமும் இணைந்து 5வது உலக வளையப்பந்து போட்டியை நடத்தியது. இந்த உலக வளையப்பந்து போட்டி தென்னாப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெற்றது.
5வது உலக வளையபந்து போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று தனித்தனி பிரிவில் கலந்து கொண்டது. அதிலும் மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என்றும் 23 வயதுக்கு உட்பட்ட  ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என்றும் தனித்தனியாக கலந்து கொண்டு விளையாடியது.
இந்த போட்டியில் இந்திய மூத்தோர் பெண்கள் அணியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ரம்யா, ஷிவானி, அம்பிகா ஆகியோரும், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான வளையபந்து போட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேர்ந்த தக்சிதா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த உலக வளையப் போட்டியில் இந்திய மூத்தோர் வளையப் பந்து அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மேலும் இந்திய வளையப் பந்து அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் பதக்கம் வென்று சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு வளையப்பந்து வீராங்கனைகள் அம்பிகா, தக்சிதா, ஷிவானி, ரம்யா ஆகியோர் வந்தனர். அங்கு அவர்களுடைய பெற்றோர்களும் ஊர்ப் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.