அரிவாள் வெட்டில் முடிந்த கிரிக்கெட் தகராறு! வன்முறையின் வெடிப்பு!!

Photo of author

By Parthipan K

அரிவாள் வெட்டில் முடிந்த இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான கிரிக்கெட் தகராறு .

கொரோனா தோற்று தொடர்ந்து குறைந்து வரும் இந்நேரத்தில் மக்கள் தைரியமாக வேலைகளுக்கும், பிற தேவைகளுக்காகவும் வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனை தொடர்ந்து இளைஞர்களும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை ஆங்காங்கு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த ஒரு பகுதியில் இளைஞர்கள் சிலபேர் ஒரே கூட்டாய் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். திடீரென்று நேற்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களான சூர்யாவிற்கும், செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் சூரியாவை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த சூரியா தனது அண்ணனான கார்த்தி இடம் இதனைப் பற்றிக் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து கார்த்தி செல்வத்தை பதிலுக்கு ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விட்டிருக்கிறார். இதனால் செல்வத்திற்கும், கார்த்திக்கும் தகராறு முற்றிவிட்டது . இதை தொடர்ந்து கார்த்தியின் இடத்திற்கு செல்வம் தனது கூட்டாளிகளுடன் சென்றுள்ளார் . அங்கு வந்து கார்த்தியை செல்வமும் அவரது கூட்டாளிகளும் ஒன்றுகூடி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதைத்தொடர்ந்து செல்வத்தையும் அவரது கூட்டாளி ஏழு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.