உலகக் கோப்பை கிரிக்கெட் 2023!!! முக்கிய வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே!!!

Photo of author

By Sakthi

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023!!! முக்கிய வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே!!!

Sakthi

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023!!! முக்கிய வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை அறிவித்த இரயில்வே!!!

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் முக்கிய வழித்தடத்தில் நாளை(அக்டோபர்8) முதல் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இம்முறை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் சென்னை சேப்பாக்கம் உள்பட பல முக்கியமான மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளது. நாளை(அக்டோபர்8) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 8, அக்டோபர் 13, அக்டோபர் 18, அக்டோபர் 23, அக்டோபர் 27 ஆகிய தினங்களில் சென்னை சிந்தாதரிபேட்டை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடத்தில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.