ஜூலை 28 ஆம் தேதி வெளியாகிறது கிரைம் திரில்லார் திரைப்படம்!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!
பீட்சா 1 திரைப்படம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள் . இந்த படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு இருந்ததால். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பீட்சா 2 படம் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் பீட்சா 3 படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் அஸ்வின் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாரயணன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை மோகன் கோவிந்த இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இந்த திரைப்படம் மே 12 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இந்த படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது படம் வெளிவரும் தேதியை அறிவித்துள்ளது. ஜூலை 28 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் கிரைம் திரில்லார் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தை திருக்குமரன் என்டர்டேயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.