இனி டிக்கெட்கள் வாங்க  தானியங்கி இயந்திரம்!! மெட்ரோ அறிவித்த புதிய வசதி!!

0
28
Automatic machine to buy tickets now!! New facility announced by Metro!!
Automatic machine to buy tickets now!! New facility announced by Metro!!

இனி டிக்கெட்கள் வாங்க  தானியங்கி இயந்திரம்!! மெட்ரோ அறிவித்த புதிய வசதி!!

சென்னை மெட்ரோ ரயில்  பொதுப் போக்குவரத்து தேவைக்கான திட்டமாகும். மேலும் தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னையில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் மெட்ரோ  ரயில் சேவை கொண்டுவரப்பட்டது.

மேலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகரப் பகுதிகளுக்கு அதிக அளவில் மின் சாரா ரயில் இயக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.

இந்திய முழுவதும் மெட்ரோ சேவை தொடர்ந்து இயக்கி வருகிறது. மெட்ரோ சேவை பொது மக்களின் சிரம்மத்தை குறைக்க ஏற்படுத்தப்பட்டது. இந்த சேவைகளை நாடு முழுவதும் பயன்படுத்தி வருகிறார்க்கள். மேலும் பொது மக்களின் நலனுக்க பல்வேறு வசதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் டிக்கெட் பெற புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த புதிய வசதி மூலம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களை அறிமுகபடுத்தி உள்ளது. இதன்  மூலம் பயணிகள் தங்கள் வங்கி டெபிட் அல்லது க்ரிடிட் கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் புதிய வசதிகளை மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே வாட்ஸ் ஆப் மற்றும் க்யூஆர் கோட் பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் செலுத்துவதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்படுத்தாக புகார் வந்தது. அதனை  தடுக்க மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தாக அறிவித்துள்ளது. மேலும் கட்டுபாட்டு மையம் அமைப்பதற்கு 65,80 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் யு.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்ஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

author avatar
Jeevitha