பிசிசிஐ மீது கடும் விமர்சனம்

Photo of author

By Parthipan K

பிசிசிஐ மீது கடும் விமர்சனம்

Parthipan K

விவோ ஒரு சீன நிறுவனம் இந்த பெயரில் பல்வேறு செல்போன் மாடல்கள் வருகின்றன. அது மட்டும் இல்லாமல் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் உள்ளது. இந்த  நிறுவனத்தால்  வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு அளிக்கப்படுகிறது. இந்திய – சீன  வீரர்களின் கடுமையான சண்டையால் சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்தது. அதனால் இந்த முறை விவோ ஸ்பான்சராக செயல்படுமா என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் ஆனால் பிசிசிஐ மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்தையே அறிவித்தது. இது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது இதன் காரணமாக ‘boycottIPL’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் ஆக்கி உள்ளனர். மேலும் இதுகுறித்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா  கேள்வி எழுப்பியுள்ளார்.