கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

0
92
Crores of government advertisements! Shocking information released by the minister!
Crores of government advertisements! Shocking information released by the minister!

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் அதற்கு அமைச்சர் தாக்குர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அந்த பதிலில் மத்திய அரசின் விளம்பரங்களுக்கு நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ91.96 கோடி மற்றும் மின்னணு ஊடகங்களில் ரூ76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

1.கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ424.84 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

2. 468.53 கோடி ரூபாய்  2016 – 2017 ஆம்  நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது.

3.636.09 கோடி ரூபாய் 2017 – 2018 ஆம் நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது.

4.429.55 கோடி ரூபாய் 2018 – 2019 ஆம் நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது.

5.295.05 கோடி ரூபாய் 2019 – 2020 ஆம் நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது.

6.179.04 கோடி ரூபாய் 2020 – 2021ஆம் நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மின்னணு ஊடகங்களில் கடந்த 2014 – 2015 ஆம் நிதியாண்டில்,473.67 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

2. 2015 – 2016 ஆம் நிதியாண்டில் 531.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

3.2017 – 2018 ஆம் நிதியாண்டில் 468.92 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

4.2018 – 2019 ஆம் நிதியாண்டில் 514.28 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

5.2019 – 2020 ஆம் நிதியாண்டில் 317.11 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

6. 2020 – 2021ஆம் நிதியாண்டில் 101.24  கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் ஊடகங்களுக்கு செலவிடும் தொகை வெளியிடவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K