திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை !!

Photo of author

By Parthipan K

திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே , கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் ஷேபனா என்பவருக்கு, அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அஜித் குமார் என்பவர், கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்துள்ளார் .இதற்காக அவர் மற்றும் அவர் மனைவி இருவரும் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மற்றும் மனைவி இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த ஷோபனா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ,அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து ஷோபனாவை தந்தை கோபால் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் அவர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி , கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.