செம டென்ஷனில் விஜய்… அதிமுகவுக்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பு…!

0
148
vijay
vijay

தமிழக தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைந்து தொண்டர்களும் தீயாய் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அரசியலில் பெரிதாக நாட்டமில்லாத விஜய், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயல்கிறார் என்ற செய்தி கேட்டதுமே அதிர்ந்து போனார். அப்பா என்றும் பார்க்காமல் அவருடைய கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், எனது பெயரையோ, இயக்கத்தின் பெயர் அல்லது கொடியையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.

அதுமட்டுமில்லாமல் அப்பா ஆரம்பிக்க போகும் அரசியல் கட்சிக்கு ஆதரவாக தனது ரசிகர்கள் செயல்படக்கூடாது என்றும், அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக எஸ்.ஏ.சி ஆதரவாளர்கள் என விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பல முக்கிய நிர்வாகிகளைக் கூட இயக்கத்தை விட்டு தூக்கியடித்தார்.

இந்நிலையில் ஆளும் அதிமுகவிற்கு ஆதரவாக கடலூரில் விஜய் ரசிகர்கள் கூட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிதம்பரத்தில் உள்ள ஏ.ஆர். மஹால் திருமண மண்டபத்தில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் ஒன்று கூடினர். தனது ரசிகர்கள் அரசியலை விட மக்கள் சேவையில் கவனம் செலுத்த வேண்டும் என பலமுறை அட்வைஸ் செய்து விஜய், தன்னுடைய ரசிகர்கள் காரியத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். ஒருவேளை கடலூர் நிர்வாகிகளை தூக்கியடிக்கும் புது அறிவிப்பை கூட வெளியிடலாம் என்றும் தகவல்கல் வெளியாகின்றன.

Previous articleவீண் விளம்பரம் தேடும் டிடிவி தினகரன்!
Next articleதிமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் முக்கிய புள்ளி!