வீண் விளம்பரம் தேடும் டிடிவி தினகரன்!

0
141

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் களம் காண இருக்கிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார்.சென்றமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று டிடிவி தினகரன் சட்டசபை உறுப்பினராக தேர்வானார். ஆனால் அந்த தொகுதிக்கு அவர் இதுவரை சரிவர எதையுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆகவே இந்த முறை நிச்சயமாக நாம் இ இந்த தொகுதியில் நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இந்தநிலையில் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் தன் மீது அதிருப்தியடைந்து இருப்பதாலும், அங்கே தன்னை கண்டு கொள்வதற்கு யாரும் இல்லாத காரணத்தாலும் வீன் விளம்பரத்திற்காகவே டிடிவி தினகரன் அமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துக் கொண்டு கோவில்பட்டி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அந்த தொகுதி மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்பதையும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்சமயம் அமைச்சராக இருக்கக்கூடிய கடம்பூர் ராஜு இதுவரை என்னென்ன திட்டங்களை கோவில்பட்டி தொகுதிக்கு கொண்டு வந்தார் என்பதையும், அந்த தொகுதி மக்கள் மறக்கவில்லை அதனால் நிச்சயமாக டிடிவி தினகரன் வெற்றி பெறுவது கடினம் என்று சொல்கிறார்கள்.இருந்தாலும் வீண் விளம்பரத்திற்காக ஓட்டை பிரிப்பதற்கு என்றே டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி தொகுதியில் சந்திரபட்டியில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கே தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நாங்கள் சொல்வதை செய்வோம், செய்வதைச் சொல்வோம், இதுவரையில் தெரிவித்த எல்லாவற்றையுமே நாங்கள் செய்து இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற கூடிய ஒரே கட்சி அதிமுக தான் எனவும், சென்ற 2006ஆம் ஆண்டு தேர்தலின் போது நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக தெரிவித்து திமுகவினர் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனாலும் யாருக்கும் அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. தற்சமயம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற எல்லாம் நிறைவேற்றப்படும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இருக்கின்ற இடங்களில் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைத்தவுடன் 100 தினங்களில் எல்லோர் வீட்டிலும் வாஷிங் மெஷின் வந்துசேரும். ஆகவே அனைவரது இல்லத்திலும் அதற்கான ப்ளக்போயிண்ட்டை அமைத்து தயாராக வைத்திருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஒரு வருடத்திற்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் அதே போல பல மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருக்கின்றோம். அவை எல்லாம் நிறைவேற்றப்படுவதற்கு எல்லோரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.