இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!..

0
175
Cupid of love who ran away from his two girlfriends!..Young women are fighting in the middle of the road!..
Cupid of love who ran away from his two girlfriends!..Young women are fighting in the middle of the road!..

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!..

அவுரங்காபத்தில் உள்ள பைதான் நகரில் தினமும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பேருந்து நிலையத்திற்கு நேற்று 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் பேருந்து நிலையத்தில் நின்று சிரிச்சி சிரிச்சி பேசிக்கொண்டு இருந்தார்கள்.பிறகு அங்கு வந்த மற்றொரு 17 வயதுடைய சிறுமி இவர்களை கண்டதும் கோபம் அடைந்தார்.

திடீரென அவர்களிடம் வந்து நீ என் காதலனை உன் பக்கம் இழுத்துக் கொண்டாயா என அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.அந்த தகராறு சிறிது நேரம் முற்றி கைசண்டையாக மாறியது.ஒருவரை ஒருவர் மாறி மாறி தலைமுடிகளை பிடித்து நடு ரோடு என்று பாராமல் சண்டை போட்டனர் இடத்தில் சிறுமிகளின் குடுமிபிடி சண்டையை பார்த்து அங்கிருந்தவர்கள் திகைத்து பார்த்தனர்.

இந்த மோதலுக்கு காரணமான காதல் மன்னனோ அவர்களின் கவனத்தை திசை திருப்பி சிதறிய நேரம் பார்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இந்நிலையில் அங்கு வந்த போலீசார் சண்டையிட்டுக்கொண்டு இருந்த சிறுமிகள் இருவரையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களை எச்சரித்த போலீசார்களோ அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

Previous article‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர்
Next articleஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்  வேளாண்மை கூட்டம்!  பொதுமக்கள் வருகை!