மருத்துவ செலவே இல்லாமல் உடலில் உள்ள 10 நோய்களை குணமாக்கி கொள்ளுங்கள்!!
1)ஆஸ்துமா
ஆடாதோடை இலை ஒன்று மற்றும் ஊமத்தம் பூ ஒன்றை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஆஸ்துமா முழுமையாக குணமாகும்.
2)வயிற்றுப்போக்கு
சூடான பாலில் 1/4 தேக்கரண்டி வசம்பு தூள் சேர்த்து கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
3)தூக்கமின்மை
ஒரு வாழை பழத்தை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
4)அஜீரணக் கோளாறு
ஒரு கிளாஸ் பாலில் சிறிது கசகசா சேர்த்து காய்ச்சி குடித்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.
5)எலும்பு தேய்மானம்
ஒரு ஸ்பூன் பாதாம் பிசினை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் ஒரு கிளாஸ் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடல் எலும்பின் வலிமை அதிகரிக்கும்.
6)இரத்த சோகை
தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் அருந்தி வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
7)மலச்சிக்கல்
தினமும் காலை நேரத்தில் ஒரு கப் சாதம் வடித்த கஞ்சி இளஞ்சூட்டில் குடித்து வந்தால் குடலில் உள்ள மலக் கழிவுகள் அனைத்தும் வெளியேறி குடல் சுத்தமாகும்.
8)உடல் பருமன்
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும்.
9)மன அழுத்தம்
செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வந்தால் மன அழுத்தம் முழுமையாக நீங்கும்.
10)தலைவலி
இரண்டு கிராம்பை தீயில் சுட்டு ஒரு காட்டன் துணியில் வைத்து கட்டி அதன் வாசனையை நுகர்ந்தால் தலைவலி சட்டுனு குறையும்.
அதேபோல் தேயிலை தூள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாக் டீயில் 2 புதினா இலை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.