மலச்சிக்கல் பிரச்சனை உடனே குணமாக! இந்த ஒரு ட்ரிங்க் போதும்!

0
206
#image_title

மலச்சிக்கல் பிரச்சனை உடனே குணமாக! இந்த ஒரு ட்ரிங்க் போதும்!

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை நாம் சரிவர தெரிந்து கொள்ளாததன் காரணமாக நம் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று அதனை சரி செய்து கொள்கிறோம்.

ஆனால் ஒரு சில பாதிப்புகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும். அந்த வகையில் எலுமிச்சை பழத்தில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.

ஆஸ்துமா சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் அவதிப்பட கூடியவர்கள் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகி வருவதன் காரணமாக ஆஸ்துமாவை எதிர்த்து போராடுகிறது மற்றும் ஆஸ்துமா சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வராதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் எலுமிச்சை பழத்தில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. தினசரி டி, காபி குடிப்பதற்கு பதிலாக லெமன் டீ குடித்து வருவதன் காரணமாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க உதவுகிறது.

உடலினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவு அதிகரிப்பதும் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கிறது.எனவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரினை பருகுவதன் காரணமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

செரிமானம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளான மலச்சிக்கல் மற்றும் சாப்பிடும் உணவுகள் சரிவர செரிமானம் ஆகாத காரணத்தினால் நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்ள வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து காலை நேரங்களில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் காரணமாக செரிமான சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து குணமடைய உதவுகிறது.

author avatar
Parthipan K