ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு

Photo of author

By Parthipan K

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது. ஆகஸ்டு 5 முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது