பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

0
237
Currency devaluation issue! The action order issued by the Supreme Court!
Currency devaluation issue! The action order issued by the Supreme Court!

பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறபட்டிருந்தது. அந்த அறிவிப்பின் மூலம் அனைத்து மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளகினார்கள்.இந்த பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு அறிவித்தது தவறான முடிவு.இந்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து மக்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறபட்டிருந்தது.மேலும் மனுதாரர்கள் தரப்பிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய கூடாது.அனைத்து தரப்பிலும் ஆய்வு மேற்கொள்ள  வேண்டும் அதற்கு  பிறகு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் தடை விதிக்கபட்டால் முந்தைய காலத்திற்கு செல்லும் நிலை ஏற்படும் அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வழக்கானது நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.அதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசனை செய்த பிறகு தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.மத்திய அரசு மேற்கொண்டுள்ள பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு எதுவும் இல்லை என இந்த அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleஎட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleபள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!