தற்போது இந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

0
243
Currently, this company is also downsizing! Employees in shock!
Currently, this company is also downsizing! Employees in shock!

தற்போது இந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

கடந்த ஆண்டு உலகில் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் டுவிட்டர்  நிறுவனத்தை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு முடிவுகளை எடுத்தார் அதில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து  அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது.

இந்நிலையில் எரிக்சன்  நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான எரிக்சன் உலகம் முழுவதிலும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 8,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எரிக்சன் நிறுவனம் சார்பில் மெமோ வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள எரிக்சன்  நிறுவனத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின்  இது முக்கிய முடிவாக கூறப்படுகிறது. மேலும் ஸ்வீடனில் 1400 பேர் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்தின் இந்த முடிவால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous article“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 
Next articleசற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!!