“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 

0
318
#image_title
"அடுத்த குறி" இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!!அதிமுக இரண்டு அணிகளாக உள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அளித்து வரும் பட்சத்தில் தற்பொழுது பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எடப்பாடியின் கீழ் கட்சி தலைமை உள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனை அன்றே கணித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ் அணியில் இருந்து சிலரை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருந்தாரே தவிர யார் யார் என்று தனித்துவமாக பெயர் குறிப்பிட்டு கூறவில்லை.

ஆனால் அந்த குறிப்பிட்ட நபர்கள் யார் என்று கட்சிக்குள் சிலரின் பெயர்கள் அடிபட்டு தான் வருகிறது. அவர்களின் முதலாவதாக இருப்பவர்தான் வைத்தியலிங்கம், எனவே இவர் தற்பொழுது எடப்பாடி பக்கம் வந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ள ரெடி என்ற மனநிலையில்தான் உள்ளார்களாம். ஆனால் இவர் கொங்கு மாஜி அமைச்சர்களால் அதிருப்தி அடைந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் பக்கம் ஆதரவு அளிக்கும் சூழல் உண்டானதாகவும் கூறுகின்றனர்.

இதனை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜியிடம் ஒரு புதிய ப்ராஜெக்டை கொடுத்துள்ளாராம்.அது என்னவென்றால் வைத்தியம் லிங்கம் அவர்களை தங்கள் பக்கம் இழுப்பது தான் எனக் கூறுகின்றனர்.

அந்த வகையில் ஓபிஎஸ் தற்பொழுது வலுவிழந்து இருக்கும் சூழலிலும் மேற்கொண்டு எடப்பாடி அவர்கள் வைத்தியலிங்கத்தை இணைத்துக் கொள்ள தடுமாறினாலும் இதனை சாதகமாக பயன்படுத்தி தங்கள் பக்கம் வைத்தியலிங்கத்தை இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளதாகவும் இதனின் முக்கிய பொறுப்பு மற்றும் இதன் செயல்பாடுகள் அனைத்தும் செந்தில் பாலாஜி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றது.

அவ்வாறு வைத்திலிங்கம் திமுக பக்கம் வந்து விட்டால் மக்களின் தென் மாவட்டங்களான மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட வற்றின் ஓட்டுக்கள் கவர எளிமையாக இருக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் வைத்தியலிங்கத்தின் மனநிலையோ ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரின் பக்கம் செல்லாமல் மௌனம் காத்து வரும் பட்சத்தில் கட்டாயம் திமுக விற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக அதன் செயல்பாடுகள் இருக்காது என கூறுகின்றனர்.