வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி?

உடலில் அதிகபடியான கெட்ட வாயுக்கள் தங்கி விட்டால் பல வித உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும். வயிறு உப்பசம், உடல் எடை அதிகரிப்பு, புளித்த ஏப்பம், வயிறு மந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த வாயுத் தொல்லையை நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*உலர்ந்த கறிவேப்பிலை

*சுண்டைக்காய் வற்றல்

*சுக்கு

*ஓமம்

*கசகசா

*சீரகம்

செய்முறை…

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் 1 கைப்படி அளவு உலர்ந்த கறிவேப்பிலை, சிறிதளவு வெண்டைக்காய் சுண்டைக்காய் வற்றல், 1/4 தேக்கரண்டி ஓமம், 1/4 தேக்கரண்டி கசகசா, 1 துண்டு சுக்கு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆறவிட்டு ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் காலை, மலை நேரத்தில் 1 கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் உடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட வாயுக்கள் முழுவதும் வெளியேறி விடும்.

அதுமட்டும் இன்றி செரிமான கோளாறு, நெஞ்சு எரிச்சல், அடிக்கடி மலம் கழித்தல், வயிற்றுக் கடுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.