11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!!

Photo of author

By Rupa

“11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்றும் மேற்கொண்டு இடைநிற்றலை தடுக்க அரசானது காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இலவச சீருடை, நோட்டு புத்தகம் என தொடங்கி லேப்டாப் வரை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மாணவர்கள் இலவசமாக பெரும் பொருட்களை வெளியே பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று வருவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அதாவது லேப்டாப், சைக்கிள் போன்றவற்றை வாங்கிக் கொண்டு அதனை பெரும்பாலான மாணவர்கள் விற்று விடுகின்றனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, மாணவர்களின் நலன் கருதி தான் மிதிவண்டி போன்றவை வழங்கப்படுகிறது. கட்டாயம் இது அவர்களின் உபயோகத்திற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர விற்பனைக்காக அல்ல.

எனவே மாணவர்கள் அதனின் நன்மையை புரிந்து உபயோகிக்க வேண்டும். இங்கு இலவசமாக பெறும் மிதிவண்டியை பெற்றுக் கொண்டு அதனை வெளியில் விற்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.