காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

Photo of author

By Savitha

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

போலீஸ் காவலில் இருந்த தாதா சகோதரர்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது, குற்றவாளிகளால் கடந்த 15-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தர பிரதேச டிஜிபி, பிரயாக்ராஜ் போவிஸ் கமிஷனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. பலியானவர்கள் கொல்லப்பட்ட நேரம், இடம், பலியானவர்களின் கைதுக்கான காரணம், பலியானவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, பலியானவர்களின் உடற்கூறு ஆய்வறிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் அளிக்க உத்தர பிரதேச டிஜிபி, பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.