உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

0
176

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

அன்று (24-10-2021)  பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.104.83க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.100.92க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Previous articleகள்ளக்குறிச்சி பட்டாசு தீ விபத்து! உடனடியாக நிவாரண உதவியை அறிவித்த முதலமைச்சர்!
Next articleபிரதமர் தொடங்கி வைத்த 64000 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டம்!