பிரதமர் தொடங்கி வைத்த 64000 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டம்!

0
135

தேசிய சுகாதார பணிகளுடன் ஒன்றிணைந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக நாடு முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளையும், உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு கிராமங்களிலும், நகரங்களிலும், பொதுமருத்துவ உட்கட்டமைப்பு வசதியில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 64 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 10 மாநிலங்களில், 16788 கிராமம் மற்றும் நகர்புற சுகாதார மையங்களும் மற்றும் மற்ற மாநிலங்களில் 11024 நகர்புற சுகாதார மையங்களும் அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதோடு இதன் மூலமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் மாவட்டங்களில் தீவிர சிகிச்சை மையங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் இதன் மூலமாக மற்ற சுற்றுவட்டார மாவட்டங்களும் பயன் அடைய இயலும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் தொலை தொடர்பு மூலமாக எல்லா மக்களும் எளிதாக தங்களுடைய நோயை கண்டறிவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம். அதோடு ஒருங்கிணைந்த பொது மருத்துவ ஆய்வுக் கூடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவரப்படும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சுகாதார நிறுவனம் தேசிய அளவிலான வைரலாஜி நிறுவனங்கள், 4 உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவிற்கும் பிராந்திய ஆராய்ச்சி தளம், உயிரியல் பாதுகாப்பு, மூன்றாம் நிலை ஆய்வகங்கள், 9 தேசிய நோய் கட்டுப்பாட்டு மையங்கள், 5 உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி அவருடைய சொந்த தொகுதியான வாரணாசிக்கு 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்திருக்கிறார்.