இன்றைய (29-10-2021) ராசி பலன்கள்.!! மங்களகரமான வெள்ளிக்கிழமை.!!

0
240

இன்றைய (29-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். நன்மையான நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் பிள்ளைகளின் வழியாக சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருப்திகரமான நாள்.

மிதுனம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களின் வழியில் பொருளாதாரம் மேம்படும். வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.

கடகம்

சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் நன்மைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சஞ்சலமான நாள்.

சிம்மம்

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கன்னி

புதிய செயல்களில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். ஈடுபாடு அதிகரிக்கும் நாள்.

துலாம்

அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவரின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். லாபம் மேம்படும் நாள்.

விருச்சிகம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். செல்வாக்கு நிறைந்த நாள்.

தனுசு

முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

மகரம்

மற்றவரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். தந்தைவழி தொழிலில் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெற்றிகள் நிறைந்த நாள்.

கும்பம்

உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன்-மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். திருப்பங்கள் உண்டாகும் நாள்.

மீனம்

சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நுட்பங்கள் நிறைந்த நாள்.

Previous articleமருத்துவமனையில் ரஜினிகாந்த்! தலைவருக்கு என்ன ஆச்சு பதறிப்போன ரசிகர்கள்!
Next articleBreaking:தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here