Breaking:தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.!!

0
211

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. அதனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக, கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த 5 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து இந்த 5 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Previous articleஇன்றைய (29-10-2021) ராசி பலன்கள்.!! மங்களகரமான வெள்ளிக்கிழமை.!!
Next articleஇன்று வெள்ளிக்கிழமை மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here