மக்களே ஆபத்து.. முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
4643
#image_title

மக்களே ஆபத்து.. முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் சுட்டெரிக்கும் கடும் சூட்டிலிருந்து தற்காத்து கொள்ள அனைவரும் குளிர்ச்சியான உணவுகளை தேடுவர். அந்த வகையில் குளிர்ச்சியான உணவுகளில் ஒன்று தான் முலாம்பழம். முலாம்பழத்தை அப்படியே நேரிடையாகவும் அல்லது ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். அந்த வகையில் முலாம் பலத்தை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மேலும் முலாம் பழம் தீமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு பார்ப்போம்.

முலாம்பழம் நன்மைகள்: Muskmelon Benefits in Tamil

கோடை காலமான வெயில் காலங்களில் உடலை குளிர்விக்கும் பலங்களில் ஒன்று முலாம் பழம். வெள்ளரிப் பழம் போலவே இருக்கும் இந்த முலாம் பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள், கனிமச்சத்துக்கள், விட்டமின்கள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது.

Mulampalam Juice benefits in tamil

முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் முலாம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் இதில் உள்ள நீர்ச்சத்து கோடை காலங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

முலாம் பழத்தில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

முலாம் பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றது. என்னதான் அதிக அளவு நன்மைகள் முலாம் பழத்தில் இருந்தாலும் அதே அளவு தீமையும் முலாம் பழத்தில் இருக்கின்றது. அது என்னென்ன தீமைகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முலாம் பழம் சாப்பிடுவதால் உடலின் இரத்த சர்க்கரையை உயர்த்தும்.

முலாம்பழம் தீமைகள் :

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முலாம் பழத்தை சாப்பிடும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் முலாம் பழத்தை அதிக அளவு சாப்பிடும் பொழுது இரத்த சர்க்கரையை அதிகரித்து விடுகின்றது. ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் முலாம் பழத்தை சாப்பிடுவதை விட சாப்பிடாமல் இருப்பது நல்லது.

muskmelon benefits and side effects

இரைப்பை குடலை பாதிக்கும் முலாம் பழம்

முலாம் பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. அவ்வாறு முலாம் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

முலாம் பழத்தில் சர்க்கரை நீர் சத்துகள் அதிக அளவில் உள்ளது. வயிற்றில் நுண்ணியிர்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவை வளர்வதற்கு அதிக அளவில் நீர் மற்றும் சர்க்கரை தேவைப்படும். முலாம் பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் இந்த நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வதோடு வயிறு முழுவதும் பரவி பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.

வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் முலாம் பழம்

என்னதான் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவு கொண்டுள்ள பழமாக முலாம் பழம் இருந்தாலும் இதை அதிக அளவில் சாப்பிடும் பொழுது இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த முலாம் பழத்தில் சார்பிடால் எனப்படும் சர்க்கரை மூலக்கூறு அதிக அளவில் உள்ளது. ஆகூயால் முலாம் பழத்தை அதிக அளவில் சாப்பிடும் பொழுது வயிற்றுப் போக்க்கை ஏற்படுத்துவதோடு வாயுப் பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

முலாம் பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது:

முலாம் பழத்தை காலை வேலையில் சாப்பிடுவது மிக நல்லது. அதுவே மாலை வேலையில் முலாம் பழத்தை சாப்பிடுவது உடலுக்கு தீங்கான ஒன்று. ஏனென்றால் முலாம் பழத்தை மாலையில் சாப்பிடும் பொழுது அதில் உள்ள எளிய சர்க்கரைகளை ஜீரணிக்க நம் உடலானது மிகவும் சிரமப்படும்.

இதனால் முலாம் பழத்தை மாலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக நமது செரிமான செயல்முறையானது காலை நேரத்தை விட இரவு நேரங்களில் மெதுவாகத்தான் செயல்படும்.

ஆகையால் இரவு நேரத்தில் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஒருவருடைய தூக்கத்தை பாத்திக்கிறது. மேலும் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றது.

இந்த பதிவின் மூலமாக முலாம்பழம் நன்மைகள், முலாம்பழம் தீமைகள், முலாம்பழம் ஜூஸ் நன்மைகள், முலாம்பழம் ஜூஸ் தீமைகள், முலாம்பழம் எப்போது சாப்பிடலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளோம்.

Previous articleஉங்களுக்கு கரு தங்கவில்லையா?? காரணம் இதுவாக கூட இருக்கலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleகழுத்து மற்றும் தொண்டையில் இந்த மாதிரி இருக்கிறதா.. அப்போ உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது..?