உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!
உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான அட்டவணை கடந்த மாதம் வெளிவந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது.
சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, இதற்கான முதல் போட்டி இங்கிலாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான சூடு பிடிக்கும் போட்டி எப்போது நடைபெறுமென்று ரசிகர்கள் காத்திருந்ததை அடுத்து அக்டோபர் பதினைந்து அன்று இவர்களுக்கு இடையேயான போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அக்டோபர் பதினைந்தாம் தேதி அன்று நவராத்திரி கொண்டாட்டம் என்பதால் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். எனவே, போட்டியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் பிசிசிஐ யிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே அக்டோபர் பதினைந்து அன்று நடைபெறும் போட்டியானது வேற தேதிக்கு மாற்றப்பட உள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து வாசிம் ஜாவர் தனக்கான இந்திய அணியை தேர்வு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பெரும்பாலும் முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அதிரடியாக களமிறங்கி குறைந்த ஓவர்களில் நூறு ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.