ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!! 

0
48
online-loan-at-risk-despite-paying-the-debt-the-tragic-end-of-the-teenager
online-loan-at-risk-despite-paying-the-debt-the-tragic-end-of-the-teenager

ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த  தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!! 

ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் திருப்பி செலுத்தியும் நிறுவனம் தந்த தொல்லையால் விபரீத முடிவைத் தேடியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் வயது 27. இவர்  தனியார் நிதி நிறுவனம்ஒன்றில்  வேலை பார்த்து வந்தார்.. இந்த சூழ்நிலையில் ராஜேஷ்  மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இதையடுத்து அவர்  வாங்கிய கடன் தொகை முழுவதையும் அவர் திருப்பி செலுத்தி முடித்துள்ளார்.

ஆனால் கடன் கொடுத்த நிதிநிறுவனம் இன்னும் கடன்தொகை பாக்கி இருப்பதாக கூறியுள்ளது. மேலும் அவரது புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் ராஜேஷ் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ராஜேஷ் விரக்தி அடைந்து வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுசிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக  இறந்தார்.

இதையடுத்து புகாரின்பேரின்  வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த ராஜேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி  உள்ளது.