தாத்தா பூ(வெட்டுக்காயப் பூண்டு): முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக செயல்படுகிறது!!

Photo of author

By Rupa

தாத்தா பூ(வெட்டுக்காயப் பூண்டு): முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக செயல்படுகிறது!!

சிறு வயதில் ‘தாத்தா தாத்தா தல குடு’ என்று தாத்தா பூ செடியை கிள்ளி விளையாடியது ஞாபகம் இருக்கா? இந்த தாத்தா பூ செடியை வெட்டுக்காயப் பூண்டு,கிணற்றுப்பாசான்,மூக்குத்தி பூ என்றும் அழைப்பார்கள்.நாம் விளையாட்டிற்காக பயன்படுத்தி வந்த இந்த செடி ஒரு அபூர்வ மூலிகை ஆகும்.

உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள்,மூக்கடைப்பு,வயிற்றுப்போக்கு,முடி உதிர்தல்,மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய தாத்தா பூ செடி உதவுகிறது.

வெட்டுக்காயங்கள் குணமாக:

ஒரு கைப்பிடி அளவு வெட்டுக்காயப் பூண்டு செடியின் இலைகளை எடுத்து அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசினால் அவை விரைவில் மறைந்து விடும்.

முடி உதிர்தல் நிற்க:

ஒரு கைப்பிடி அளவு தாத்தா பூ இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு இதை வெயிலில் நன்கு உலர்த்தவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு உலர்த்திய தாத்தா பூ இலைகளை போட்டு மிதமான தீயில் காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.

நஞ்சு முறிவு:

வெட்டுக்காயப் பூண்டு இலைச் சாறு மற்றும் குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து குடித்தால் உடலில் உள்ள நஞ்சு முறியும்.

மூட்டு வலி குணமாக:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 2 தேக்கரண்டி தாத்தா பூ இலை பேஸ்டை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணையை ஆறவிட்டு மூட்டு பகுதியில் தடவி வந்தால் சில தினங்களில் மூட்டு வலிக்கு தீர்வு கிடைத்து விடும்.

வயிற்றுப்போக்கு நிற்க:

ஒரு கப் தயிரில் ஒரு தேக்கரண்டி தாத்தா பூ இலையின் சாறு சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக வயிற்றுப்போக்கு நிற்கும்.