கேட்ச் பிடித்ததும் புஷ்பாவாக மாறிய டேவிட் வார்னர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

Photo of author

By Sakthi

கேட்ச் பிடித்ததும் புஷ்பாவாக மாறிய டேவிட் வார்னர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டேவிட் வார்னர் கேட்ச் பிடித்ததும் புஷ்பா திரைப்படத்தில் வரும் அல்லு அர்ஜூன் போல செய்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நேற்று(அக்டோபர்3) பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதை யடுத்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 352 ரன்கள் இலகக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 4 கேட்ச்சுகளை பிடித்து அசத்தினார். இதில் பாகிஸ்தான்அணியின் பேட்ஸ்மேன் அப்துல்லா சபிக் அவர்களை கேட்ச் பிடித்து அவுட் செய்த டேவிட் வார்னர் புஷ்பா ஸ்டைல் செய்து கொண்டாடினார்.

நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற போட்டியில் 12 ஓவரை ஆஸ்திரேலிய அணியின் சீன் அபாட் அவர்கள் வீசினார். 12வது ஓவரின் 3வது பந்தை அப்துல்லா சபிக் தூக்கி அடிக்க அந்த பந்தை டேவிட் வார்னர் சாதாரணமாக கேட்ச் பிடித்து அவுட் செய்தார். அப்பொழுது டேவிட் வார்னர் புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செய்வது போல செய்து அசத்தினார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இது மட்டுமில்லாமல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோக்களை பதிவு செய்து உள்ளார். இவரை விளையாட்டு வீரர் என்று கூறுவதை விட வருங்கால நடிகர் என்று கூறலாம். டேவிட் வார்னர் இந்தியத் திரைப்படங்களின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். அதே போல இவருடைய ஆட்டம், நடிப்புக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.