சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!!

0
23
#image_title

சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!!

நம்ம சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “வழக்குப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 15-10-2023 வரை வரவேற்கப்படுகிறன.

வேலை: அரசு பணி

நிறுவனம்: சேலம்‌ மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையம்

பதவியின் பெயர்: வழக்குப் பணியாளர் (Case Worker)

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் BSW / MSW (Counselling Psychology) உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.உளவியல் ஆலோசகர் அல்லது மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) அரசு,அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான பணிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.இப்பதவிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: நேரடி அல்லது தபால் வழி

இப்பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடி அல்லது தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,அறை எண் 126, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம்.

தொடர்புக்கு: 0427 – 2413213

கடைசி தேதி: 15-10-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.