தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

0
27
#image_title

தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று(அக்டோபர்3) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அதாவது அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளிமண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெளிமண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவி வருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று(அக்டோபர்3) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று(அக்டோபர்3) வானம் ஓர் அளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் இன்று(அக்டோபர்3) ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

தமிழகத்தில் அக்டோபர் 3ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் குருந்தன்கோட்டில் 13 செ.மீ அளவு மழையும், நாகர்கோவிலில் 10 செ.மீ அளவு மழையும், கொட்டாரம் பகுதியில் 8 செ.மீ அளவு மழையும் பெய்துள்ளது. இரணியல், அடையாமடை, அணைக்கெடங்கு, மயிலாடி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ அளவும் மழையும் பெய்து இருக்கின்றது.

தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளிலும் இன்று(அக்டோபர் 3) மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே போல குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே போல தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளிலும், லட்சத்தீவு கடல் பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.