டிடிஎப் வாசன் கார் மோதி ஒருவர் காயம்! இணையத்தில் வைரலாகும் டிடிஎப் வாசன் வீடியோ!!

Photo of author

By Sakthi

டிடிஎப் வாசன் கார் மோதி ஒருவர் காயம்! இணையத்தில் வைரலாகும் டிடிஎப் வாசன் வீடியோ!!

 

மஞ்சள் வீரன் டிடிஎப் வாசன்  சென்ற கார் ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் மஞ்சள் வீரன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் செல்அம் இயக்குகிறார். மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்  டிடிஎப் வாசன் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 29ம் தேதி வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்நிலையில் டிடிஎப் வாசன் அவர்கள் சென்ற கார் மோதி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

 

சென்னை அமைந்தக்கரை அருகே டிடிஎப் வாசன் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவருடைய கார் பயணி ஒருவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த பயணிக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விபத்து ஏற்படுத்திய டிடிஎப் வாசன் அவர்கள் அவருடைய காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோ மூலமாக சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

விபத்துச் செய்தியை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் டிடிஎப் வாசன் அவர்களின் காரை கைப்பற்றி மஞ்சள் வீரன் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. காரில் டிடிஎப் வாசன் அவர்கள் அதிக வேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.