பொதுவாக இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளில் உள்ளவர்கள் பணி அடர்ந்த பகுதிகளில் சுற்றுலா செல்ல ஆசை படுவதுண்டு அவ்வாறு நடந்த நிகழ்வு ஒன்று இந்தியாவை உலுக்கியுள்ளது. சுற்றுலா சென்று தங்கிய இந்தியர்கள் மர்மமான முறையில் ஜார்ஜியாவில் உள்ள குடெளரி மலை விடுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தனர்.
ஐரோப்பா நாட்டில் உள்ள ஒரு குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு தான் ஜார்ஜியா இங்கு உள்ள மக்கள் மற்றும் வருவாய் சுற்றுலா துறையை நம்பியே இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பல நாடுகளில் இருந்து பல மக்கள் இங்கு வந்து செல்வதுண்டு. இந்தியாவில் இருந்து இங்கு பல மக்கள் வருவதுண்டு அதுமட்டுமல்லாமல் சில இந்தியர்கள் அங்கு வேலை செய்தும் வருகின்றனர். இங்கு ஒரு மலை பகுதியில் அமைந்துள்ள ரெசார்ட் தான் குடெளரி.
இந்த ரிசார்ட்டில் சில நாட்களுக்கு முன் 12 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவர்களில் 11 பேர் இந்தியாவை சேர்ந்தோர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனை ஜார்ஜியா நாட்டின் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்த அன்று மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் இயங்கியதாகவும் அதிலிருந்து வெளியேறிய நச்சு புகையால் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை தடயவியல் குழு தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.