வாட்டும் கொடிய வறுமை!! பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!!
கொடிய வறுமை வாட்டியதால் தாய் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என்ற அவ்வையாரின் வரிகளுக்கு ஏற்ப இளமையில் வறுமை எப்போதும் கொடியதாக இருந்து வருகிறது. இந்த வறுமையை தாங்க முடியாத தாய் ஒருவர் பத்து மாதம் சுமந்து பெற்ற பச்சிளம் குழந்தையை ரூ. 800க்கு விற்பனை செய்துள்ளார். இந்த கொடிய சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ஜா என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் கராமி முன்பு என்ற பழங்குடியின பெண். இவரது கணவர் முசு. இவர் வேலை நிமித்தம் காரணமாக தமிழ்நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வதாக பெண்குழந்தை பிறந்தது.
ஏற்கனவே குடும்ப கஷ்ட காரணமாக முதல் குழந்தையை வளர்க்கவே சிரமப்பட்ட நிலையில் வறுமை காரணமாக இரண்டாவது பிறந்த குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்த பெண் கராமி முர்மு, பத்து மாதம் சுமந்து பெற்ற பச்சிளம் குழந்தையை ஒரு தம்பதிக்கு அதை ரூ.800-க்கு விற்றுவிட்டார். அவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கணவர் முசு, தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக ஒடிசா மாநிலம் சென்றுள்ளார். அங்கு தனது மனைவியிடம் புதிதாகப் பிறந்த இரண்டாவது பெண் குழந்தை எங்கே என கேட்டுள்ளார். அதற்கு கராமி முர்மு, அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது மனைவி கூறிய பொய்யில் சந்தேகம் அடைந்த முசு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசாரின் தீவிர விசாரணையில் வறுமையால் குழந்தையை வளர்க்க முடியாது என கருதி கராமி முர்மு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு தனது குழந்தையை 800 ரூபாய்க்கு விற்று விட்டதாக தெரியவந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கராமி முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி மற்றும் அதற்கு ஏற்பாடு செய்த நபர் என நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.