இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 

0
46
Friendship with girl on insta !! A shock awaited the student who came to see eagerly!!
Friendship with girl on insta !! A shock awaited the student who came to see eagerly!!

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் நட்பு பாராட்டிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டார்.

தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பினால் ஏகப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் மாணவர் ஒருவரை கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் வசித்து வரும் மாணவர் ரிஷப். இவர் ஜே.இ.இ. பொறியியல் தேர்வுக்கு தயாராகி வந்து உள்ளார். ரிஷப் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் பொழுது இன்ஸ்டாகிராமில் மைனர் சிறுமி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங்கில் பேசிக்கொண்ட சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26- ஆம் தேதி அந்த மாணவரிடம் தன்னை வந்து சந்திக்குமாறு அந்த சிறுமி கூறியுள்ளார். ஆனால் அப்போது முக்கியமான வேலை இருந்ததால் அந்த மாணவரால் சிறுமியை பார்க்கச் செல்ல இயலவில்லை. இதனால் கடந்த ஜுன் 30-ஆம் தேதி தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு அந்த சிறுமியை பார்ப்பதற்கு ஆவலாக மாணவர் சென்றுள்ளார்.

அங்கு அவரது நண்பரை செல்லுமாறு கூறிய சிறுமி, மாணவரின் நண்பர் சென்றதும் மேலும் மூன்று பேரின் துணையுடன் அந்த மாணவரை கடத்திச் சென்றுள்ளார். அந்த சிறுமியின் உண்மை முகம் வெளிப்பட்டதில் மாணவர் அதிர்ச்சி அடைந்தார்.

அடுத்ததாக மாணவரை பழைய கைதியாக வைத்து அவரின் பெற்றோரிடம் ரூ 50 லட்சம் கேட்டு சிறுமி மிரட்டி உள்ளார். பணத்தை தரவில்லை எனில் மாணவரை கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

பின்பு மாணவரின் பெற்றோர் பணத்துடன் வரவேண்டிய இடம் பற்றி கேட்டதும் போன் கட் செய்யப்பட்டதுடன் மட்டுமில்லாமல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் மாணவரின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மாணவரின் நண்பரை விசாரணை செய்து அதன் மூலம் மாணவரின் செல்போன் உரையாடல்களை கவனித்தனர்.

உரையாடல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து அந்த சிறுமியை போலீசார் பாட்னா நகரில் கைது செய்தனர். அப்போதுதான் அந்த சிறுமி மைனர் என்பதும் அவரின் கடத்தலுக்கு உதவிய அவரின் மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.