கடகம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

0
208

கடகம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு சனி பெயர்ச்சி ஆகின்றார்.

கடக ராசிக்காரர்கள் விட்டுக்கொடுத்து போகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் கற்பனைத் திறன் அதிகம் உள்ளவர்கள் இந்த சனி பெயர்ச்சி இத்தனை நாள் உங்களுக்கு கண்ட சனியாக இருந்தது தற்போது அஷ்டமத்துசனியாக மாறுகின்றது.

8 ஆம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்கின்றார். குடும்பத்தை ஒற்றுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

எட்டாம் இடத்தில் சனி இருந்தால் விபரீத ராஜயோகம் எனவும் கூறப்படுகிறது. உங்கள் தொழிலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மாணவ மாணவிகளுக்கு இடம் மாற்றம் ஏற்பட்டு படிப்புகள் தொடரும். பயணங்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டக்கூடிய காலமாக அமையும்.

மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும், பூர்வீக சொத்துகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவை தீர்வுக்கு வரும். மேலும் வாகனங்களில் பயணம் செய்யும்பொழுது அதிக அளவு கவனம் தேவை.

உணவு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட்டால் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். குருவும் சனியும் சேர்ந்து ஒரு இடத்தை பார்ப்பதனால் விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் அமையும். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதனால் இந்த அஷ்டமத்து சனி அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள்!