புதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்!

Photo of author

By Parthipan K

புதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்!

சமீப காலமாக உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் பல்வேறு நோய்களை பரப்பும் வைரஸ்கள் அதிகரித்து வருகின்றன.உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது,உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனை எதிகொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் போல உருமாற்றம் அடைந்து வரும் நோய்க்கிருமிகளால்,உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும், டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கபட்டிருந்தார்.அவருக்கு வயது 60.அவர் தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சர்க்கரை நோய் மற்றும் உடல் சம்மந்தமான பிரச்சனைகள் பலவும் அவருக்கு இருந்து வந்தது.சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்,இவரின் இறப்பு மும்பை மக்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளது.

மும்பையில் டெல்டா பிளஸ் வைரஸால் ஏற்படும் முதற் உயிரிழப்பு இதுவாகும்.அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அதில் இருவர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

மும்பையில் இதுவரை 11 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னையில் ஒருவருக்கும் இந்த வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.டெல்டா பிளஸ் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.