அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!

0
127

விபத்தில் காயமடைந்த பெண்ணை மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த ராம்வதி என்பவர், மகன் மற்றும் உறவினர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த வாகனம் இடித்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ராம்வதியின் மகன் மற்றும் உறவினர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக ராம்வதியை , அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இருப்பினும் அந்த அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ,ராம்வதிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி காவலர் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வற்புறுத்திய போதும் விபத்து நடப்பது சாதாரணமான ஒன்று என்றும் தினமும் நிறைய பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள் எனவும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

இதனால், காவலர்களுக்கும் மருத்துவருக்கும் இடையே அரை மணி நேரத்துக்கு மேல் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காயத்துடன் இருந்த ராம்வதி படுக்கவைத்த நிலையில், மருத்துவரின் அலட்சியத்தின் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த காவலர் மருத்துவர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் ,இதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ராம்வதி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே ,இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், மருத்துவரிடம் அலட்சியத்தால் அந்தப் பெண் உயிரிழந்திருந்தால், அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous articleஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி
Next articleடிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்