தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

Photo of author

By Parthipan K

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

Parthipan K

death-of-a-person-who-went-for-peace-of-mind-in-tuticorin-district-the-plight-of-no-one-to-help

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் (46). இவர் நேற்று முன்தினம் இரவு தருவைகுளம் கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிக காற்று அடித்த காரணத்தால் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கடலில் விழுந்திருப்பார் எனவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடற்கரையில் யாரும் இல்லாத நிலையில் நிக்கோலஸ் கடலில் விழுந்தவுடன் உதவி செய்வதற்காக எவரும் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் நிக்கோலஸ் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் வழக்கம்போல் காலையில் அந்த பகுதிக்கு மீனவர்கள் வந்தன.ர் அப்போது கடலில் மிதந்து கொண்டு இருந்தா நிக்கோலஸ் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள்  அந்த உடலை பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிக்கோலஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.