குழந்தைகள் கண் முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கட்டுப்பாடுகள் நிறைந்த பாகிஸ்தானில் அண்மை காலமாக பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இருவருக்கு மரண தண்டனை விதித்த சம்பவம் பாகிஸ்தானில் பரப்பரடைந்துள்ளது. பாகிஸ்தானில் பிறந்து பிரான்ஸில் குடியேறிய பெண் ஒருவரு கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் பகுதிக்கு தனது உறவினர்களை காண இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
அந்த பெண் செப்டம்பர் 9ம் தேதி லாகூர் நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, வழியில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுள்ளது. ஆள் அவரமற்ற பகுதியாக இருக்கவே அந்த பெண் தனது உறவினரை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார். அந்த நேரம் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காருக்கு அருகே தனியே நின்றிருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த நகையையும், கையில் இருந்த பணத்தையும் கேட்டு மிரட்டியதுடன் பறித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த பெண்ணை அருகில் உள்ள வயல்வெளிக்கு தூக்கி சென்ற இருவரும் குழந்தைகள் கண்முன்னே அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்து நகை, பணத்துடன் தப்பியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் புகார் அளிக்க விசாரணை மேற்கொண்ட லாகூட் போலீசார் குற்றவாளிகளான ஆபிட் மல்கி மற்றும் ஷப்கத் அலி பாகா ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பேசிய போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர்ம் அந்த பெண் ஏன் குழந்தைகளுடன் தனியாக சென்றார்..? எனவும், காரில் பெட்ரோல் இருக்கிறதா ..? இல்லையா ? என்பதை ஏன் பாக்கவில்லை எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
போலீசாரின் இந்த பேச்சால் நாடு முழுவதிலும் போராட்டம் வெடித்ததுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலரது தரப்பில் குரலெழுப்பப்பட்டது. மக்களின் போராட்டத்தை பார்த்த பாகிஸ்தான் அரசு கடந்த டிசம்பர் மாதம் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தை இயற்றியது.
இந்த நிலையில் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லாகூர் வன்கொடுமை வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, ஆபிட் மல்கி மற்றும் ஷப்கத் அலி பாகா மீதான பாலியல் வன்கொடுமை, கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதால் அவர்களை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
லாகூர் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.