இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

Photo of author

By Vinoth

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்க உள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் பார்மில் இருக்கும் தீபக் ஹூடா மீண்டும் அணிக்குள் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் பெஞ்ச்சில் உடகாரவைக்கபட உள்ளார் என்றும் தெரிகிறது.