ஆவின் பால் விற்கும் உரிமையாளருக்கு அதிர்ச்சி தகவல்!. பாலின் அளவு குறைவு!.அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

0
196
Shocking information for the owner who sells Aavin's milk! The amount of milk is low!. What are the authorities doing?
Shocking information for the owner who sells Aavin's milk! The amount of milk is low!. What are the authorities doing?

ஆவின் பால் விற்கும் உரிமையாளருக்கு அதிர்ச்சி தகவல்!. பாலின் அளவு குறைவு!.அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

நாள்தோறும் ஆவின் நிறுவனம் வாயிலாக தமிழக முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள் முதல் செய்யப்படுகிறது. மேலும் இவை மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு ஆரஞ்சு,பச்சை,நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன.

இதில் ஆரஞ்சு பாக்கெட்டுகள் ஸ்ட்ராங்கான பால் எனவும் பச்சை நிற பாக்கெட்டுகள் சாதாரண பால் பாக்கெட் எனவும் நீல நிற பாக்கெட் அதிக ஸ்ட்ராங்கான பால் எனவும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நாள்தோறும் 13 லட்சம் பிற மாவட்டங்களில் 20 லட்சம் என ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மீதமுள்ள பாலில் ஆவின் வெண்ணெய, பால் பவுடர்,பால்கோவா  உள்ளிட்ட பல வகையான பால் பொருட்கள் அதிலிருந்து தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. திமுக அரசு பொதுப்பேற்றதும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆவின் பால் விற்பனை அமோகமாக விற்று தீர்ந்து வந்தது. நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் ஆவின் பாலை பால் கடைகளில் ஆவின் பாக்கெட் பால் கொடுங்கள் என கேட்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வந்துள்ள 50 மில்லி பால் பாக்கெட் அளவு குறைவாக இருந்தது. ஆவின் பால் பாக்கெட் பொருத்தவரை அதன் மில்லி கிராம் அளவையும் கணக்கிடும்போது 500 மில்லி என்பது 517 கிராம் இருக்க வேண்டும். இதில் பால் பாக்கெட் இரண்டு கிராம் இருக்கும். எந்த வகையில் பார்த்தாலும் பாலின் எடை 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட் களின் அளவு 430 கிராம் இதை கண்டறிந்தால் சென்னையை சேர்ந்த பால் முகவர் ஒருவர் ஆவின் அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் மூலமாக தகவல் அனுப்பினார். தகவல் கொடுத்ததும் இதைப் பற்றி சிறிது கூட அக்கறை இல்லாமல் ஆல் பாக்கெட்டின் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

இது குறித்து முறையான விசாரணை நடத்தி நுகர்வோர்களுக்கு சரியான அளவில் பால் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஆய்வின் அதிகாரிகள் கூறுகையில் சென்னை மாதவரம் பால் பண்ணையில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது அந்த இயந்திரத்தில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக இந்த பாலின்  அளவு குறைவு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறினார்கள்.இந்த பிரச்சனையை  விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K